×

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திம்மசமுத்திரம், கம்மாளம்பூண்டி, முத்தியால்பேட்டை, மொளச்சூர், ஆதனூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் கார்டு குறைத்தீர் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் குடிமைபொருள் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமை தாங்கினார். முகாமிற்கு சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான மனுக்கள் இந்த முகாமில் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது  உடனடி தீர்வு காணப்படும் என உறுதியும் அளித்தனர். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ration ,Grievance ,Camp ,Kanchipuram Union ,Kanchipuram ,Thimmasamuthram ,Kammalampoondi ,Muthialpet ,Molachur ,Adanur ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!